துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் மற்றும் துறை முக அதிகார சபையின் தலைவர் காவன் ரத்நாயக்க ஆகியோருக்கிடையே (31) கொழும்பு துறை முக அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இக் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
ஜப்பான் நாட்டின் நிதி உதவியின் மூலம் திருகோணமலை துறை முகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதை அடுத்து பிரதியமைச்சர் இது தொடர்பில் துறை முக அதிகார சபையின் தலைவருக்கு இது விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசித்தார்.
திருகோணமலை துறை முகத்தின் அபிவிருத்திக்கான மாதிரி வரைபடங்கள் ஊடாக தலைவர் பிரதியமைச்சருக்கு இதன் போது விளக்கமளித்தார்.
இக் குறித்த கலந்துரையாடலில் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களும் உடனிருந்தார்கள்.
Comments